காலநிலை நிதி இலக்கு: வளர்ச்சி அடைந்த நாடுகள் சாதனை, ஆனால் உதவியின் தரம் கேள்விக்குறி!
OECD அறிக்கையின் முக்கிய கவலை என்னவென்றால், வழங்கப்படும் பொது நிதியில் கிட்டத்தட்ட மூன்றில் நான்கு பங்கு கடனாகவே வழங்கப்படுகிறது. மானியங்கள் அல்லது மிகக் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்குவது குறைந்துள்ளதால், வளரும் நாடுகள் கடன் சுமையில் சிக்குவதாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். Centre for Science and Environment அமைப்பும், இது போன்ற கடன் திட்டங்கள் நம்பிக்கையைக் குறைப்பதாகவும், நீண்டகால காலநிலை முயற்சிகளைப் பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
