Heat Wave : தமிழகத்தில் வெப்ப அலை இனி இருமடங்கு உயரும்! சென்னைதான் அதிவெப்ப நகரம் – ஆய்வில் அதிர்ச்சி!
Urban Lab of the Centre for Science and Environment செய்த ஆய்வில், 2011ம் ஆண்டிற்குப்பின், இந்திய பெருநகரங்களில், சென்னையில் தான் சராசரி கோடைக்கால வெப்பம் மிக அதிகமாக 37.4°C என்ற அளவில் உள்ளது. சென்னை, கடற்கரைக்கு அருகில் உள்ளதால், கோடை காலத்தில் ஒப்பீட்டு ஈரப்பத அளவு(Relative Humidity) அதிகம் இருப்பதால், இந்திய பெருநகரங்களிலேயே, சென்னையில் தான் வெப்ப குறியீடு (Heat index) அதிகமாக இருப்பதும், அதனால் சென்னையின் வெப்பக் குறியீடு 6.9°C என்ற அளவில் அதிகமாக இருந்து மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆய்வில், கோடைக்கால வெப்பம் 2001-11, 2014-23 கால கட்டத்தில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் ஒப்பிடப்பட்டது. (2011-23 இடைப்பட்ட காலம்) கோடைக் காலத்தில் சென்னையின் சராசரி வெப்பம் கடந்த 10 ஆண்டுகளில், 0.4°C அதிகரித்துள்ளது. 2001-10 - 2014-23 இடைப்பட்ட காலத்தில் ஒப்பீட்டு ஈரப்பதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச்-ஏப்ரல் 2024ல் சராசரி வெப்பம், 2014-23 ஆண்டை, ஒப்பிடுகையில், 1°C என அதிகரித்துள்ளது. ஒப்பீட்டு ஈரப்பதத்தின் காரணமாக, சென்னையின் வெப்பக் குறியீடு சராசரியாக 6.3°C அதிகரித்துள்ளது. சென்னையின் வெப்பக் குறியீடும் (Heat Index) 5 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போது 41°Cக்கு அதிகமான வெப்பக் குறியீட்டு நாட்கள், 2001-10 ஆண்டுகளை ஒப்பிடுகையில், 3 மடங்கு அதிகரித்துள்ளது. மழைக்காலம் (Monsoon), மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தில், 2°C வெப்பக் குறியீடு உயர்ந்து மக்களுக்கு அசவுகர்யம் அதிகரித்துள்ளது. வெப்பக் குறியீட்டால் ஏற்படும் அசவுகர்யம் மழைக்காலம், அதற்கு முந்தைய காலத்தில் உள்ள இயல்பான வேறுபாடு சென்னையில் மறைந்து வருகிறது. இந்த 2 காலங்களில் ஏற்படும் அசவுகர்யம் அதிகரித்தும், ஒரே மாதிரியாகவும் உள்ளது. இரவு நேரங்களில், நிலப்பரப்பு வெப்பம் குறைவதும் தற்போது நிகழ்வதில்லை. வெப்பம் குறைவது 5 சதவீதம் நடக்காமல் போகிறது. சென்னையில், நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island Effect) பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை நகரின் மைய வெப்பம் பகல் நேரத்தில், சுற்றுப்புற புறநகர் பகுதிகளை விட 0.8°C அதிகமாகவும், இரவு நேரங்களில் 0.9°C அதிகமாகவும் உள்ளது. வெப்ப குறியீடு- நகரம் 36.5° C -கொல்கத்தா 34.3° C -மும்பை 32.2° C -டெல்லி 29.3°C -ஹைதராபாத் 26.9°C -பெங்களூரு சென்னையிலோ, அது மிக அதிகமாக 37.4°C என உள்ளது. சென்னையின் வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் கட்டிடங்களின் பரப்பு (Built-up area) கடந்த 20 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 2003ல் 30.7 சதவீதம் இருந்த கட்டிடப்பரப்பு, 2023ல் 73.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், சென்னையின் பசுமை பரப்பு 34 சதவீதத்தில் இருந்து, 20.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே, பசுமை பரப்பு மிக அதிகமாக சென்னையில் குறைந்துள்ளது. கொல்கத்தாவில் கட்டிடப்பரப்பு 10 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
