கடுமையான பருவநிலை சவால்களை சந்தித்த இந்தியா
India Faced Severe Weather 2023-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து செப்டம்பர் வரை முதல் 9 மாதங்களுக்கு இந்தியா ஒவ்வொரு நாளுமே கடுமையான வானிலையை சந்தித்ததாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இதன்மூலம் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3,000 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. சுயாதீன சிந்தனை மையமான சிஎஸ்இ (CSE - Centre for Science and Environment) புதன்கிழமை) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையின்படி ஜனவரி 2023 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 86 சதவீத நாட்கள் கடுமையான வானிலை நிலவியுள்ளது.
